ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வின்போது பொதுமக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் முதல்வரை தாக்கினார். இதை எடுத்து முதல்வரின் பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து சிறையில் அடைத்துள்ள நிலையில், நடத்தப்பட்ட வரும் விசாரணையில் முதன்மைக் குற்றவாளியான குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த 51 வயது ஆட்டோரிக்ஷா ஓட்டுநரான ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் சக்ரியா (ராஜேஷ் கிம்ஜி அல்லது ராஜேஷ் சகாரியா என்றும் குறிப்பிடப்படுகிறார்) என அடையாளம் காணப்பட்டார்.
என் நிலையில் முதல்வர் தாக்கப்பட்ட விபரத்தில் இரண்டாவது குற்றவாளியான சக்ரியாவின் நண்பரான தஹ்சீன் சையத் (தெஹ்சீன் சையத் என்றும் உச்சரிக்கப்படுகிறார்), ஆகஸ்ட் 25 அன்று பிரதானக் குற்றவாளிக்கு பணத்தை மாற்றியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இருவரிடமும் முதல்வர் இதாரா தாக்குதல் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை எடுத்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது, இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்புப் பணியில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பொறுப்பு டெல்லி காவல்துறையிடம் திரும்பியுள்ளது.