சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம். சாக்கடை கால்வாயில் அழுகிய நிலையில் கடந்த 50 வயது ஆணின் சடலத்தை கைப்பற்றி அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை. இறந்து கிடந்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை தீவிரம்
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இங்கி வருகிறது. தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டின் பின்புறம் உள்ள சாக்கடை பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதிக்கு வந்தவர்கள் தகவல் கூறினர்.
இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஊழியர்கள் அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது தண்ணீர் ஓடும் கால்வாயில் கால் மட்டும் தெரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து சடலம் கடந்த பகுதியை உடைத்து சடலத்தை வெளியே எடுத்தனர். அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க . ஆணின் சடலம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தது யார் ஃ அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக அவர் மருத்துவமனை பகுதிக்கு வந்தார். அது தற்செயல் மரணமா? அல்லது தற்கொலையா கொலையா என்கிற பல்வேறு கோணங்களில் அண்ணாமலைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.