பணத்திற்காக ஸ்கேன் செய்து பார்த்து பெண் சிசுக்களை அழித்த அரக்கன் கைது..!!

திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் சென்று இடம் தெரியாமல் நடுவழியில் திருதிருவென விழித்து நின்று இருந்துள்ளனர். அதனை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் ஆட்டோவை மடக்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாக கூறி உள்ளனர். இது குறித்து கந்திலி போலிசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணை களத்தில் இறங்கி விசாரணை செய்ததில் புரோக்கர்கள் மூலம் ஆள் அரவமற்ற வீடுகளை குறிவைத்து அதனை ஒருநாள் வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு நாள் ஸ்கேன் செண்டர் நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து மருத்துவ இயக்குனர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தகவல் அளித்து மருத்துவ குழுவினரும் தீவிர விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இது போல ஒரு கும்பல் சுற்றி வருகிறது அவர்களாக தான் இருக்கும் என்று தொலைபேசி எங்களை வைத்து அடையாளம் கண்டு புரோக்கர்கள் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவியான ஜோதி (37), சிவசக்தி (40), காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (47), சந்தூர் அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் (39), திருப்பத்தூர் முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமலா (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் வேலை செய்தது உறுதி படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மூன்று பெண்களை வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், இரண்டு ஆண்களை ஆண்கள் சிறையிலும் அடைத்த நிலையில்மேலும் தலைமறைவாக இருந்த ஸ்கேன் செய்ய வந்த மருத்துவரான திருப்பத்தூர் சாமநகர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் சுகுமார்(60) என்பவரை கந்திலி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண் சிசுக்கொலை கொலை செய்வதற்காகவே இந்த ஸ்கேன் நடப்பதாக கூறப்படும் நிலையில் இதுபோன்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News