tvk மாநாடு விஜய் தலைமையில் நாளை மதுரை பாரப்பத்தி பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநாட்டின் முகப்பு பகுதியில் 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நாளை மாநாடு நடைபெறும் போது டி வி கே தலைவர் விஜய் இந்த 100 அடி கொடிக்கம்பத்தை ஏற்றி வைத்துவிட்டு மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
இந்த நிலையில் 100 அடி கொடிக்கம்பம் நிறுத்தும் பணி கிரேன் மூலமாக நடைபெற்றது. இதை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது தான் பார்வையிட்டு சென்றார்.
அப்போது 100 அடி கொடிக்கம்பம் பொருத்தப்பட்ட பின்னர் சில நிமிடங்களில் திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது.
அப்போது கொடிக்கம்பத்தின் முன்பகுதி இன்னோவா கார் மீது முழுவதுமாக விழுந்ததில் கார் முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது 100 அடி உயரக் கொடி கம்பத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மாநாடு தேடலில் பரபரப்பு காணப்படுகிறது.