சிவகங்கை அரண்மனை வாசல் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம் வழங்குதல், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 6750 ஆக நிர்ணயித்தல், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புதல், அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற அச்சங்கத்தைச் சேர்ந்த 52 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு வேனில் அழைத்து சென்றனர். இதனால் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.