திருத்தணி அருகே புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் குழந்தை ஜோகித்.,பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான்
இந்நிலையில் நேற்று ஜோகித் காய்ச்சல் இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்
பின் குழந்தையின் தாய் சசிகலா, மருத்துவரின் அறிவுரைப்படி பாதி மாத்திரை கொடுத்துள்ளார். ஆனால் மாத்திரை தொண்டைக் குழாயில் உணவுக்குழாய் வழியாக செல்லாமல் சுவாசகுழாயில் சிக்கிக் கொண்டு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக குழந்தையை மீட்ட பெற்றோர், திருத்தணி அரசு மருத்துவமனையிக்கு அழைத்து வந்துள்ளனர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாத்திரை தொண்டையில் சிக்கு குழந்தை இறந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.