முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சுயதொழில் மேற்கொள்ள மானியத் தொகை காசோலைகளை தமிழ்நாடு அரசு கொறடா கா. ராமச்சந்திரன் வழங்கினர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மற்றும் முப்படை வீரர்களின் குடும்பத்தினர் நலனுக்காக தமிழக முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டங்கள் இன்று காலை துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சுயதொழில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் உதகையில் உள்ள தேவாங்கர் மண்டபத்தில் நடைபெற்ற வரும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்று திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு கொறடா கா. ராமச்சந்திரன் மூலதன மானியம் தொகையை வழங்கியவர், நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் மனு அளிக்கும் முகாமை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ,உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ் உட்பட பொதுமக்கள் ஏராளமான பங்கேற்றனர்.