தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கு..! 4 பேர் மீது குண்டர் சட்டம்..!

தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் மதன்குமார். பிரபல ரவுடியான இவர் மீது இரண்டு கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் இருக்கிறது. இவர் கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு மதுரை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதன்படி சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது இதன்படி ரவுடி மதன்குமார் கடந்த மாதம் 15 ஆம் தேதி மனைவியுடன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்..

அப்பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஹரி பிரசாத் தலைமையில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் மதன் குமாரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர் இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ரவுடி ஹரி பிரசாத், அந்தோணி, சந்தோஷ், ஜெயசூர்யா, செல்வ பூபதி,
முத்து, ரிஷிகபூர் கிருஷ்ணகாந்த், இசக்கி ராஜா, விக்கி, மற்றும் பிரவீன்ஷா ஆகியோரை கைது செய்தனர்..

தொடர் விசாரணையில் கொலையான ரவுடி மதன்குமாருக்கும் ரவுடி ஹரி பிரசாந்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது இதனால் அவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

இவர் மீது தாளமுத்து நகர் ஆறுமுகநேரி ஆகிய காவல் நிலையங்களில் கொலை உட்பட ஐந்து வழக்குகள் இருக்கிறது இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சேலத்தில், பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பொது அமைதியை பாதிக்கும் வகையில் ரவுடி மதன்குமாரை கொலை செய்த ரவுடி ஹரி பிரசாத் அந்தோணி சந்தோஷ் ஜெயசூர்யா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் காந்திமதி துணை கமிஷனர் சிவராமன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரிக்கு பரிந்துரை செய்தனர் இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர் ரவுடி ஹரி பிரசாத் உட்பட நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி சிறையில் இருக்கும் அவர்கள் மீது குண்டத்தடும் சட்டம் பாய்ந்தது.

RELATED ARTICLES

Recent News