போதைக்கு அடிமையான அரசு பள்ளி மாணவர்கள்..!! பதைபதைக்கும் காட்சிகள்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் இல்லாத நேரத்தில் மாணவர்களுக்கு புகை பொருட்கள் விற்பனை அதனை மாணவர்கள் விளையாட்டு மைதானத்தின் சுவர் ஓரம் நின்று புகைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்.

அரசு தரப்பில் புகை பிடிப்பது தடை புகையிலை விற்பது தடை என பல்வேறு தடைகள் போட்ட போதிலும் அதன் விற்பனையும் குறையவில்லை பயன்பாடும் குறையவில்லை. சட்டங்கள் எல்லாம் பெயர் அளவில் மட்டுமே இருந்து வருவதற்கு இந்த மாணவர்கள் புகைபிடிப்பது எடுத்துக்காட்டு.

மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்க கூடாது என்ற இடத்தில் உருவாகிறது இந்த பழக்கங்கள். மாணவர்களை தண்டித்தால் வீட்டில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து ஆசிரியர்களை தாக்குவது இல்லை என்றால் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது.

இதன் விளைவாக ஆசிரியர்களுக்கு பணி மாற்றம் இடை நிறுத்தம் வேலை நிறுத்தம் என பல பிரச்சனைகள் வருவதால் ஆசிரியர்கள் கண்டிப்பதையும் தண்டிப்பதையும் நிறுத்தி விட்டனர்.

1000 பேர் படித்த பள்ளியில் தற்போது சுமார் 500 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். அதுவும் பெரிய அளவில் இல்லாமல் பெயர் அளவில். இந்த மாணவர்களின் போதை பழக்கத்திற்கு கடையில் விற்பனை செய்வது மட்டும் காரணம் இல்லை பொது வெளியில் புகைப்பதும் காரணமே. இந்த மாணவர்களை மீட்குமா அரசு என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News