போராட்டம் தொடரும்..! ஐடி ஊழியர் கவின் பெற்றோர் அதிரடி..!!

நெல்லையை சேர்ந்த கவின் என்ற இளைஞனை ஆணவப்படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் பெற்றோர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, மே 17 இயக்கம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர்ஸ் பேருந்து நிறுத்தம் எதிரில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்….

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முன்னதாக செய்தியாளர்களை சிந்தித்து கூறியதாவது, காவல்துறை அதிகாரிகளாகிய பெற்றோர்களின் ஆதரவில் இந்த படுகொலை நடைபெற்று உள்ளது…

பெற்றோர்களாக இருக்கக்கூடிய கொலையாளிகள் புகைப்படம் தற்பொழுது வரை வெளிவரவில்லை… புகைப்படம் வெளிவருவதில் என்ன பிரச்சனை உள்ளது..! ஏன் இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றனர்… புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தால் காவல்துறையின் மதிப்பை கூட்டிவிட முடியுமா.? தொடர்ச்சியாக காவல்துறை மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது…

மேலும், காவல்துறை, ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் அமைதி காக்கிறார்கள்… இதுவரை திமுக அரசு இதைப்பற்றி பேசவும் இல்லை, கண்டணமும் தெரிவிக்கவில்லை…

விசிக கட்சியினர் எங்கே சென்றார்கள்..! வீரவசனம் சமூக நீதி பேசிய அண்ணாமலை, பாஜவினர் என அனைவரும் எங்கே சென்று விட்டீர்கள்?…விஜய் எங்கு சென்று விட்டார் என பல கேள்விகளை எழுப்பினர்

ஆணவ படுகொலையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளாகிய பெற்றோர்கள் இருவருமே பணி நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யபட வேண்டும்.. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இதற்கான போராட்டம் தொடரும்…

இந்த படுகொலைக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றால் குற்றவாளி பெற்றோர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யபட வேண்டும்..

ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்… இதற்கான சட்டத்தை கொண்டு வரவில்லை என்றால் இதற்கான காரணத்தை திமுக அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தார்…

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்…

RELATED ARTICLES

Recent News