“கார்கில் போர்” பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய ராணுவம்..!!

1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற தினத்தையே கார்கில் விஜய் திவாஸ் (Kargil Vijay Diwas) என நாம் அனுசரிக்கிறோம். அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்து, கார்கில்லை கைப்பற்ற பாகிஸ்தான் நடத்திய தீடீர் தாக்குதலை சுமார் 2 மாதங்கள் கடும் குளிரில், இந்திய ராணுவம் மறு தாக்குதல் நடத்தி வெளியேற்றிய தினமே ஜூலை 26. 1999ஆம் ஆண்டு, இந்தியாவையே பெருமைப்பட வைத்த ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்த்து போற்ற வேண்டிய நாள் இதுவாகும்.

லாடாக் பகுதியில் அமைந்துள்ள கார்கில் என்ற இடத்தில் 1999-ம் ஆண்டு மே மாதம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறு பாகிஸ்தான் நுழைந்தது. காஷ்மீர் கிளர்ச்சி படையினருடன் கைகோர்த்த பாகிஸ்தான், கார்கில்லை கைப்பற்ற எடுத்த முயற்சி அது. அத்துமீறு உள்நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி படையினரை. பல்வேறு திசைகளில் இருந்து இடைவிடாமல் தாக்கி முன்னேறியது இந்திய ராணுவம் கடும் குளிர், தொடர் குண்டு வீச்சி, எங்கு பார்த்தாலும் தூப்பாகி தோட்டாக்கள், கண் மூடி திறந்தால் கொத்துக்கொத்தாக செத்து கிடக்கும் உடல்கள் என சுமார் 2 மாதங்கள் பனி மலையில் தாக்குபிடித்து முன்னேறி கொண்டே இருந்தது இந்திய ராணுவம். இந்திய ராணுவ தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கியது பாகிஸ்தான்.

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை, தொடர் போராட்டம் என இறுதியாக ஜூலை 26-ம் தேதி மீண்டும் கார்கில்லை கைப்பற்றியது இந்தியா. இந்த நாளையே நாம் கார்கில் தினமாக அனுசரிக்கிறோம். இந்த ஆப்ரேஷனுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆப்ரேஷன் விஜய். அப்படி என்றால் வெற்றி என அர்த்தம். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து, பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க தொடங்கினர்.

ஆனால், அந்த பகுதி போர் நடத்துவதற்கான பகுதி அல்ல. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி. மனிதர்களாக தாக்கு பிடிக்க முடியாத அளவில் கடும் குளிர், பனி சூழந்த பகுதி. இந்திய ராணுவ தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கியது பாகிஸ்தான். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை, தொடர் போராட்டம் என இறுதியாக ஜூலை 26-ம் தேதி மீண்டும் கார்கில்லை கைப்பற்றியது இந்தியா. இந்த நாளையே நாம் கார்கில் தினமாக அனுசரிக்கிறோம்.

RELATED ARTICLES

Recent News