கடலூர் மாவட்டம் புவனகிரியில் 16 வயது தங்கைக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர அண்ணன், நண்பர்களுக்கு விருந்தாக்கி 3 ஆண்டு சித்திரவதை
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவியின் உறவினரான புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சித்தி மகனான அஜய் (உறவுமுறையில் அண்ணன்) என்பவர் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவி (அப்போதைய வயது 13) 8 ஆம் வகுப்பு படித்த போது, பருவமடையாத நேரத்தில் அந்த மாணவியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த், சூரியபிரகாஷ் என்கிற ஆதி (21) மேல் புவனகிரி சேர்ந்த காதலன் சக்தி (21) ஆகிய மூவரும் சிறுமியிடம் தனித்தனியே பேசி, நடந்த சம்பவத்தை கூறி அவரை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரது தாய் இதுகுறித்து கேட்டபோது அவர் எதையும் கூறவில்லை. இதையடுத்து சிறுமியின் தாய் தனது மகளை சென்னையில் உள்ள சிறுமியின் சித்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். அங்கு சித்தி சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி சம்பவம் குறித்து, சென்னையில் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அஜய், சூர்யபிரகாஷ் என்கிற ஆதி, சக்தி, அரவிந்த், ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாகியுள்ள அரவிந்தை போலீசார் வளைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புவனகிரியில் பெறும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.