“ஆடி முதல் வெள்ளி..” தெய்வீக அருள் நிறைய இதை செய்ய மறக்காதீங்க..!!

ஆடி மாதம் என்றாலே இந்துக்கள் பெரும்பாலும்., திருவிழா நடத்துவது, கூழ் ஊற்றுவது கோவிகளுக்கு செல்வது என மாதம் முழுவதும் ஆன்மீக வழிபாட்டில் இறங்கி விடுவார்கள்.

அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், புட்லூர் அங்காள அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திரளான பக்தர்கள், அதிகாலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இம்மாதத்தின் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு பொங்கலிட்டு, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பு என சொல்லப்படுகிறது., கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள்., இன்று வீட்டை சுத்தம் செய்து அம்பிகை அம்மனுக்கு பூஜை செய்து தீபம் ஏற்றி நெய் வைத்தியம் படையலிட்டு வழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது

குறிப்பாக அனைத்து விதமான செல்வங்களை அள்ளித் தரக் கூடிய நாளான ஆடி வெள்ளியன்று மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் வீட்டில் தெய்வீக அருள் நிறையும், நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீக உண்மை…

RELATED ARTICLES

Recent News