“சென்னை மாகாணம்” தமிழ்நாடு நாள் உருவான வரலாறு..!

தமிழன் என்று கர்வம் கொள்ளும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள், காரணம் இன்று “தமிழ்நாடு நாள்”. 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி முதல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது..

தமிழ்நாடு நாள் ஏன் கொண்டாடப்படுகிறது..? வரலாற்றின் தியாகங்கள் என்ன என்பது பற்றி இதில் பார்க்கலாம்.

மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்தார். பல வருட போராட்டங்களுக்கு மத்தியில் முதலமச்சர் அண்ணாதுரை சட்டமன்றத்தில் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நாளையே நாம் ”தமிழ்நாடு நாள் என கொண்டாடுகிறோம்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது, மூன்று மாகாணமாக பிரித்து ஆதிக்கம் செய்ய தொடங்கினர். அதில் தென் பகுதியில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வந்த அனைத்து பகுதிகளும் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது.

பின்னர் 1947-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர்., 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்படி, தமிழ் பேசும் மக்களை கொண்டு உருவான பகுதிதான், தமிழ்நாடு. காலப்போக்கில் மெட்ராஸ் மாநிலம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி அண்ணாதுரை மெட்ராஸ் ஸ்டேட் முதலமைச்சராக தேர்வானார். இதனைத் தொடர்ந்து, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு வரவேற்பு கிடைத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 1968-ம் ஆண்டு ஒப்பதல் வழங்கப்பட்டது. இறுதியாக 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு பெயர் மாற்றம் அரசிதழில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியை சந்தித்தது; 1961 ஆம் ஆண்டு, 1963 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பு தீர்மானங்களும் தோல்வி அடைந்தது

1967 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் அண்ணா, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை “தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என பெயர் மாற்றம் செய்தார்

1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, 1968 ஆம் ஆண்டு நவ.23 ஆம் தேதி நாடாளுமன்ற மசோதாவில் தீர்மானம் நிறைவேறியது.

1969 ஆம் ஆண்டே ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆனால், 2021-ம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்த இந்த தீர்மானம், ஜூலை 18-ம் தேதி “தமிழ்நாடு நாள்” என கொண்டாட வேண்டும் என அதிகார பூர்வமாக அறிவித்தார்..

RELATED ARTICLES

Recent News