இரயில் நிலையங்களில் தொடர் வாகன திருட்டு..!! 2 பேர் அதிரடி கைது..!!

இரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்..

சென்னை கிழக்கு தாம்பரம் இரயில் நிலையம் நுழைவாயிலில் ஏராளமான பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள் அவ்வப்போது திருடப்படுவதாக சேலையூர் காவல் நிலையத்தில் தொடர் புகார்கள் எழுந்துள்ளது..

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்த போது., 2பேர் வாகனங்களை திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சாம்பிராஸ் (27) மற்றும் சுகவர்மன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரனையில் சுமார் 30 இருசககர வாகனங்களை திருடி குண்டுமேடு பகுதியில் பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்து வரும் விஜயகுமார் (56),லிங்கதுரை (40),கண்ணன் (32) ஆகியோரிடம் மலிவு விலைக்கு விற்பனை செய்து வந்ததும் அவரகள் முழுவதுமாக கழற்றி இருசக்கர பாகங்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது,

ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News