கல்லூரி மாணவி தற்கொலை..!! போலீஸ் விசாரணையில் பகீர் பின்னணி..!!

வயிற்றுவலி காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆறுமுகம் மனைவி லட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்த நிலையில் குடும்பத்தை லட்சுமி தான் கூலி வேலை பார்த்துக் கொண்டு காப்பாற்றி வருகிறார். முதல் மகள் பாண்டீஸ்வரி ஏற்கனவே இறந்த நிலையில் மூன்று பிள்ளைகள் மட்டுமே இவர்களுக்கு இருக்கின்றனர்.

இவர்களது கடைசி மகள் ஜோதி., பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு
பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை மேற்கொண்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார்., காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்., சடலத்தை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டதில், மாணவி தீராத வயிற்றில் வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது..

RELATED ARTICLES

Recent News