முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஜூன் 26ம் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் 7 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடைசாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது. நேற்று நண்பகல் முதல் பக்தர்க்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.