சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அதே மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆலம்பட்டியை சேர்ந்த நிகிதா, தனது காரில் இருந்த நகையை அஜித்குமார் திருடி சென்று விட்டதாக கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில்., அவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை முன் வைத்தது.
44இடங்களில் காயம். FIR பதிவு செய்யாமல் சிறப்புப்படை வழக்கை கையில் எடுத்தது ஏன் ..?
போலீசார் கூட்டாக சேர்ந்து கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சாதாரண கொலை வழக்கு போல் இல்லை, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
பதவி ஆணவத்தில் அஜித்தின் அனைத்து உடல் உறுப்புகளையும் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்க கூடாது.
மேலும் நேற்று அவரது மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அஜித்குமாரின் உடற்கூறு ஆய்வறிக்கையில்., வயிற்றில் கம்பி குத்திய காயம், மண்டையோட்டில் அடிக்கபட்டதால் ஏற்பட்ட காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஆகியவை இருப்பதாகவும் தொடர் சித்தரவை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..
மேலும், சிகரெட் மூலம் சூடு வைக்கப்பட்டு அதன் மூலம் காயங்கள் ஏற்பட்டிருப்பதும் அறிக்கையில் பதிவாகியுள்ளது.
காவலர்கள் தாக்கியதில் காயங்கள் ரத்து கட்டுக்களாக மாறி., தொடர் சித்திரவாதியால் அவை காயங்களுக்கு மருந்து அளிக்கப்படாமல் காயங்கள் கன்றி இருப்பதும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உடல் முழுவதும் அதிக காயங்கள்., இருப்பதால் தனிநபர் மட்டுமின்றி பல காவலர்கள் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் தீவிர காவல் சித்திரவதை, மற்றும் மனித உரிமை மீறல் என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்து.
இதன் பின்னர் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிடத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகை திருட்டுப்போனதாக புகார் அளித்த பெண் நிகிதா மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் நிகிதா தலைமறைவாகியுள்ளார்.
தொடர்ந்து 4 வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் இவ்வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக, பாமக, பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உட்பட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.