அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை கௌதமி ஆஜர்.
நடிகை கௌதமியின் சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக மத்திய குற்ற பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கௌதமி புகார் கொடுத்த நிலையில் அழகப்பன் கைது செய்யப்பட்டார்.
இதில் அழகப்பன் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.
அழகப்பன் எந்த வகையில் இவ்வளவு பணத்தை சம்பாதித்தார் என்ற அடிப்படையில் விசாரணை. அழகப்பன் மீது மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாட்சி அடிப்படையில் நடிகை கௌதமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.