தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.. முன்னதாக நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு., காவலர்கள் தாக்கி உயிரிழந்த காவலாளி அஜித்குமார் இழப்பிற்கு நீதிக்கேட்டு ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
அதன் பின்னர் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி களம் காண இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைய போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவினர் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தனியாக களம் காண இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.. மேலும் தவெக வின் இந்த அதிரடி அறிவிப்பால் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது..