சமூக வலைதளத்தில் இளம்பெண்ணிற்கு மெஸேஜ்..!! வாலிபர் கைது..!!

சமூக வலைதளத்தின் மூலம் பெண்ணிற்கு அவதூறு மெஸேஜ் அனுப்பிய நபர் கைது.

சமூக வலைத்தளங்களில் இன்றைய ஜெனரேஷனஸ் பலரும் மூழ்கி கிடைக்கின்றனர். சிலர் சமூக வலைத்தளம் மூலம் சுயதொழில் செய்தாலும் பலர் அந்த சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோக்கள்., காதல் விவகாரங்கள், பணமோசடி போன்றவற்றில் சிக்கி கொள்கின்றனர். அதுபோல தான் இந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது..

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணிற்கு Rtr Mani_ Ketavan_ mani என்ற இன்ஸ்டாகிராம் IDயிலிருந்து தவறான மெஸேஜ்கள் வந்துள்ளது. அப்பெண் அதனை பிளாக் செய்த பின்னரும் மீண்டும் அதே IDயிலிருந்து, அப்பெண்ணின் வீடியோகளுக்கு அருவருக்கதக்க வார்த்தைகளால் கமெண்ட் வந்ததாகவும்., ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் கமெண்ட் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்., வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் Rtr Mani_ Ketavan_ mani மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி தனக்கு வந்த மெசேஜை ஆதரமாக சமர்ப்பித்துள்ளார்.

புகாரின் பேரில் Rtr Mani Ketavanmani என்ற ஐடியை பதிவிட்ட நபரை பற்றிய தகவல் வேண்டி Meta Platformக்கு மெயில் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் IP Address ன் Mail ID, Phone Number, அதன் Network User ID முகவரி மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபர் சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்த திவாகர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திவாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..

RELATED ARTICLES

Recent News