“சிகரெட்டால் சூடு, 50 இடங்களில் காயம்..” பதபதைக்கும் அஜித்தின் பிரேத பரிசோதன அறிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள., காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வழக்கில் போலீசாருக்கு இந்த அளவிற்கு அதிகாரம் கொடுத்தது யார்., குற்றவாளியாக இருந்தாலும் தனியாக அழைத்து செல்ல காரணம் என்ன.? லாக்கப்பில் நடந்தது என்னவென்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்வியாக மதுரை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்..

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அஜித்குமாரின் உடற்கூறு ஆய்வறிக்கையில்., வயிற்றில் கம்பி குத்திய காயம், மண்டையோட்டில் அடிக்கபட்டதால் ஏற்பட்ட காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஆகியவை இருப்பதாகவும் தொடர் சித்தரவை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..

மேலும், சிகரெட் மூலம் சூடு வைக்கப்பட்டு அதன் மூலம் காயங்கள் ஏற்பட்டிருப்பதும் அறிக்கையில் பதிவாகியுள்ளது.

காவலர்கள் தாக்கியதில் காயங்கள் ரத்து கட்டுக்களாக மாறி., தொடர் சித்திரவாதியால் அவை காயங்களுக்கு மருந்து அளிக்கப்படாமல் காயங்கள் கன்றி இருப்பதும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உடல் முழுவதும் அதிக காயங்கள்., இருப்பதால் தனிநபர் மட்டுமின்றி பல காவலர்கள் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் தீவிர காவல் சித்திரவதை, மற்றும் மனித உரிமை மீறல் என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News