“30 வயதில் கல்யாணம்..! ஆனா பொண்ணு ” லவ் மேரேஜ் படத்தின் குட்டி ஸ்டோரி..!!

90ஸ் கிட்ஸ்க்கு  பெண்  கிடைக்கிறது அவ்ளோ கஷ்டமா என்ன..? அப்படினு  கேட்கும் படியாவும் ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி  வெக்குறது  எவ்வளவு  கஷ்டம்  அப்படினு சொல்லுற ஒரு  படம்  தான்  “லவ் மேரேஜ்”. இந்த  படம்  எப்படி  இருக்கு..?  படத்தின்  ஒன்  லைன்     ஸ்டோரி  என்ன..?  படத்தின் ப்ளஸ் ஆர்  மைனஸ் என்ன  அப்படினு  இந்த  பதிவுல  பார்க்கலாம்..

பழம்பெரும்  நடிகர்  சிவாஜிகணேசனின் பேரனும்., பிரபல  முன்னணி  நடிகர்  பிரபுவின்  மகன்  தான் விக்ரம் பிரபு. கும்கி  படத்தின்  மூலம்  தமிழ்  சினிமாவில்  அறிமுகமான  இவர்  தன்னுடைய  முதல்  படத்திலேயே  நல்ல  ஹிட்  கொடுத்தாரு.  அதன்  பின்  இவன் வேற மாதிரி.,  சிகரம் தொடு, அசுரகுரு, இறுக்கப்பற்று உள்ளிட்ட  பல  ஹிட் படங்களை  கொடுத்து இருக்காரு.

அந்த  வரிசையில  தான்  இந்த  படமும்  இடம் பிடிச்சு இருக்கு. அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில்  விக்ரம் பிரபு, கஜராஜ், அருள்தாஸ், ரமேஷ் திலக், சுஷ்மிதா பட் உள்ளிட்ட  பலர் இந்த  படத்துல நடிச்சு  இருக்காங்க. 33 வயசான  நம்ப  ஹீரோவுக்கு  ஒரு கல்யாணம்  பண்ணி  வெக்கனும்னு  அவர  பெத்தவங்க  ஆசைபடுறாங்க  ஆனா அவருக்கு  சொந்தத்துல கூட  பொண்ணு கிடைக்கல.

ஒரு  வழியா நம்ப  ஹீரோவுக்கு பொண்ணு  கிடைக்க  நிச்சயத்திற்காக அவங்க  ஊருக்கு போறாங்க.,  அப்போ கொரோனா டைம்  என்றதுனால  லாக் டவுன்  போட  ஹீரோ  பேமிலி  அங்கையே மாட்டிக்குறாங்க.. அப்போ  படத்துல  ஒரே ரோமேன்ஸ் காட்சி  தான்.. அப்படினு  நீங்க  நினைச்சுட்டு இருப்பீங்க. அதுதான்  கிடையாது.. ஹீரோவுக்கு  பார்த்த  பொண்ணு  வேற ஒருத்தர  காதலிச்சு  அவரு கூட  ஓடி போயிடுறாங்க.  அப்போ  நம்ப  ஹீரோவோட  நிலைமை  என்ன..?  ஹீரோவுக்கு  கல்யாணம்  ஆகுதா  இல்லையா  என்றது தான் படத்தின்  மீதி கதை..

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை காட்சி வரை திரைக்கதையை  இயக்குநர் ஷண்முக பிரியன் அழகாக அமைத்திருந்தார். ஆனா இடைவேளைக்கு  பின்  கொஞ்சம்  போரிங்  அப்படினு சொல்லலாம். குறிப்பாக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  பாடல்கள் மற்றும் இசையில்  பட்டையை கிளப்பியிருக்காரு சொல்லலாம்.

RELATED ARTICLES

Recent News