என்ன சிம்ரன் இதெல்லாம்..? புதிய  சர்ச்சையை கிளப்பிய  நடிகை த்ரிஷா..!!   

தளபதி  விஜய்  பிறந்தநாள் அன்று  நடிகை  த்ரிஷா  பதிவிட்ட  போஸ்ட்  சர்ச்சையை  கிளப்பிய நிலையில் தற்போது  மீண்டும்  ஒரு  புதிய  சர்ச்சையை கிளப்பியுள்ளார்..

தமிழ்  சினிமாவில் 90ஸ்  முதல் தற்போது  வரை  முன்னணி  நடிகையாகவும்  கதாநாயகியாகவும்  நடித்து கொண்டிருப்பவர்  த்ரிஷா.  லேசா லேசா  படத்தின்  மூலம்  தமிழ் சினிமாவில்  அறிமுகனார். முதல்  படம்  வரவேற்பை  கொடுக்க  வில்லை  என்றாலும்  தொடர்ந்து  பல  பட வாய்ப்புகள்  கிடைத்தது..  பின்னர்  சாமி, கில்லி  போன்ற  படங்கள்  இவரது  சினிமா  கெரியரில்    ஒரு  டர்னிங்  பாயிண்டாக  மாறியது. 

அதன்  பின்னரே நடிகை  த்ரிஷா  கனவு  கன்னியாக  வளம்  வர  ஆரம்பித்தார்.. கில்லி  படத்தின்  வெற்றியை  தொடர்ந்து  அபியும்  நானும், விண்ணை தாண்டி  வருவாயா  மற்றும் 96 போன்ற  படங்கள்  ரசிகர்கள்  மனதில்  நீங்காத  இடத்தை  பிடித்ததோடு பெரும்  தாக்கத்தை  ஏற்படுத்திய  ஒரு  படமாக அமைந்தது.

விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா  என  அனைத்து முன்னணி  நடிகர்களுடன்  நடித்த  ஒரே  நடிகை இவர்..  குறிப்பாக  த்ரிஷா 1999 மிஸ் சென்னை போட்டியை வென்ற பிறகு சினிமாவில்  முக்கியத்துவம் பெற்று   “தென்னிந்தியாவின் ராணி” என்று ரசிகர்களால்  அழைக்கப்படுகிறார்.

என்னதான்  முன்னணி நடிகையாக  இருந்தாலும்  இவரது  ஒரு  சில  செயல்கள்  பெரும்  சர்ச்சையை கிளப்பி விடுகிறது..

கடந்த ஜூன் 22ம்  தேதி  நடிகரும்.,  தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைவருமான  விஜய்  பிறந்தநாள்  அன்று அவருக்கு  வாழ்த்து தெரிவிக்கும்  விதமாக  அவருடன்  எடுக்கப்பட்ட  புகைப்படத்தை  பகிர்ந்து  இருந்தார்.  அது  ஒரு  சிலரிடையே  கடுப்பை  கிளப்பியது.. காரணம்  ஏற்கனவே  இவர்கள்  இருவருக்கும்  இடையே  கிசுகிசுக்கப்பட்டு வரும்  நிலையில்  அந்த  புகைப்படம்  பேசுபவர்களுக்கு  அல்வாவாக இருந்தது.

இப்படி  இருக்கையில், சாமியாரிடம்  பெண் ஒருவர்,  நீங்கள் மன உளைச்சலாக இருக்கின்ற போது என்ன செய்வீர்கள் என்று கேட்பது போலவும்,  அதற்கு அந்த சாமியார், என்னால்  தான் மற்றவர்களுக்கு மன உளைச்சல்  என கூறுவது  போல  எடிட்  செய்த  புகைப்படம்  ஒன்றை  இன்ஸ்ட்டாகிராம்  ஸ்டோரியாக வைத்துள்ளார். அதாவது  சாமியார்களால் என்றும்  மனஉளைச்சல்  என  கூறுவதை  போல  அந்த  பதிவு  உள்ளதாக  ஒரு  சிலர் கருத்து  தெரிவித்து வருகின்றனர்..

RELATED ARTICLES

Recent News