“ஜெயம் டூ காதலிக்க நேரமில்லை..” நடிகர் ரவிமோகன் 22…!!

கடந்த 2003ம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் “ரவி” இப்படத்தை இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் ஆரம்பத்தில் ஜெயம்ரவி என அழைக்கப்பட்டார். ஆனால் இவரது இயற்பெயர் “மோகன் ரவி” என்பது குறிப்பிடத்தக்கது.

பரதநாட்டியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சிறுவயதிலேயே நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனத்தைக் கற்றுக் கொண்டு 12 வயதிலேயே அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். கல்லூரி பட்டப்படிப்பை முடித்ததை தொடர்ந்து சினிமாத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மும்பையிலுள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் இவரை எட்டியது. குறிப்பாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும்., தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன், பேராண்மை மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற படங்கள் நல்ல ஹிட் கொடுத்து அதிக நாட்கள் திரையரங்கில் ஓடியது என சொல்லலாம்.

ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததாலும் இவர் நடிப்பை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என சொல்லலாம். குறிப்பாக பெண்கள் மத்தியில் சாக்லேட் பாயாக திகழ்கிறார்.

தற்போது இவர் டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு, கராத்தே பாபு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாத்துறையில் மோகன் ரவி கால் பதித்து 22 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதால் கராத்தே பாபு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்..

RELATED ARTICLES

Recent News