யு.பி.எஸ்.சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..!! எப்படி அப்ளே செய்யணும் தெரியுமா..?

யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு எழுதும் மாண்வர்களுக்குகாக தமிழக அரசு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக தகுதிகள் என்ன..? யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க முடியும்..? அப்ளே செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

இத்தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது. அதில்., கடந்த 2023ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வினை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படும் வேலை வாய்ப்புகளுக்கு மாணவர்கள் பங்கேற்று வேலை வாய்ப்பை எளிதில் பெரும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2023-24க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு., கல்வி பயிற்சி மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான இதர வசதிகளையும் அரசு செய்துக்கொடும்.. என பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டிருந்து.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், சிவில் சர்வீசஸ் பயிலும் மாணவர்களை மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் மாதம் தோறும் ஊக்க தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது., அதன்படி இத்திட்டத்தை நடைமுறை படுத்தும் வகையில் அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள்.,
https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி அரசு தனது அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :

முதலில் நான் முதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள்., நீங்கள் பதிவின் போது கொடுத்திருந்த அலைப்பேசி எண்ணை உள்ளிட்ட வேண்டும்.

பின்னர் அந்த எண்ணிற்கு ஒரு (OTP) செல்லும், பின்னர் அதனை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் யுபிஎஸ்சி தேர்வின் போது விண்ணப்பித்த விவரங்களை எந்த வித பிழையுமின்றி கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்.

பின்னர் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை சரி பார்த்து விண்ணப்பத்தை ஓகே செய்து விடவும்.

RELATED ARTICLES

Recent News