அதர்வாவின் “டிஎன்ஏ” படம் எப்படி இருக்கு..? ஹிட் or ப்ளாப்..?

பிரபல நடிகர் முரளியின் மகனான “அதர்வா” பானாகாத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தந்தை பெயரை மகன் காப்பாற்றுவாரா என கேள்விகள் எழுந்த நிலையில்., புலிக்கு பிறந்தது பூனையாகாது என சொல்லும் படி அதர்வாவின் படங்கள் இருக்கும். இவர் பல பெண்களின் மனதில் ஆட்டோகிராப் போட்டுள்ளார் என சொல்லலாம்.

இந்நிலையில் அதர்வாவின் “டிஎன்ஏ” படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் கதை என்ன..? ரசிகர்கள் கூறிய கருத்து என்ன..? என்பதை பற்றி இதில் படிக்கலாம்.

அதர்வாமுரளி, நிமிஷாசஜயன், பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் டிஎன்ஏ. இப்படத்தை வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். அதர்வாவுக்கு இந்த படம் வெற்றியை கொடுத்ததா..? அல்லது தோல்வியை சந்தித்துள்ளார் என்பது பற்றி இந்த தகவலில் பார்க்கலாம்.

கடந்த 2022ம் ஆண்டு வெளியான ட்ரிக்கர் படத்திற்கு பின் அதர்வா கம்பேக் கொடுத்துள்ள படம் தான்., “டிஎன்ஏ..” தலைப்பிற்கு ஏற்றார் போல படத்தின் கதைக்களமும் அமைந்துள்ளது. காதல் தோல்வியால் மதுவில் மூழ்கி கிடக்கும் அதர்வாவிற்கு, மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிமிஷாசஜயனுடன் திருமணமாகிறது.

இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்க., அந்த குழந்தை தன்னுடையது அல்ல என நிமிஷாசஜயன் கூறுகிறார். மனநலப்பிரச்சனையால் தான் இவர் இப்படி சொல்கிறாரோ என என்னும் அதர்வா., மனைவியின் வார்த்தையை நம்பி குழந்தையை தேடுகிறார்.

டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை இவர்களது அல்ல என தெரிய வர., குழந்தையை தேட ஆரம்பிக்கிறார். குழந்தை கடத்தல்., பணம் கேட்டு மிரட்டும் கும்பல் என பல விறுவிறுப்பான கதைக்ளதுடன் இந்த படம் அமைந்துள்ளது. இதனிடைய வில்லன் செய்தது தரமான சம்பவம் என சொல்லலாம். என்னடா முழு கதையை நான் சொல்லிட்டேன் நினைக்காதிங்க. இப்படத்தில் பல ட்விஸ்ட் மற்றும் எதிர்பார்ப்பு நிறைய இருக்குங்க.

எனவே இந்த படம் அதர்வாவிற்கு ஒரு நல்ல ப்ளாக்பஸ்டர் படமாக அமையும் என ரசிகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது…

RELATED ARTICLES

Recent News