ஒரு படம் திரையில் வெளிவருகிறது என்றால் அதற்கு சில தினங்களுக்கு முன் இருந்தே படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி விடும். ஒரு சில படங்களுக்கு புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஹவுஸ் புல் ஆவதும் உண்டு. இப்படி இருக்கையில் தற்போது குபேரா படத்திற்கு புது சிக்கல் எழுந்துள்ளது..
அமீர்கான் நடிப்பில் சித்தாரே ஜமீன் பர், தனுஷ்-ன் குபேரா, அதர்வா-வின் டிஎன்ஏ, வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட 4 படங்கள் வெளியாகவுள்ளது. தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில்., ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், உருவாகியுள்ள படம் தான் “குபேரா”.
இந்நிலையில் படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், குபேரா மற்றும் சித்தாரே ஜமீன் பர் படத்திற்கான புக்கிங் தொடங்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்களும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு பெரிய ஹீரோக்களின் படம் வெளியாகிறது என்றால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பங்கு கொடுக்கப்படுவது வழக்கம்., ஆனால் இந்த முறை குபேரா படத்திற்கு ஷேர் கொடுப்பது குறித்த எந்த அப்டேட்டும் தியேட்டர் உரிமையாளர்கள் கொடுக்கப்படாததால் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது.
மறுபக்கம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் அதர்வா நடித்துள்ள “டிஎன்ஏ” படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. மேலும் தக்லைப் படத்தின் தோல்வியை தொடர்ந்து ரசிகர்கள் வருகை குறைந்து இருப்பதால் புதிய படத்திற்கான டிக்கெட் புக்கிங் கூட ஹவுஸ் புல் ஆகவில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..
இதனிடையே குபேர படத்தின் டிக்கெட் புக்கிங் ஆனது ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் விரைவில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.