“MAY EYE COME IN..” நடிகர் ஸ்ரீ சொல்லவருவது..? அந்த இயக்குனர் நினைத்தது வீண் போகல..!!

வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் “ஸ்ரீ”. சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே கடினமான ஒன்று அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே முதல் படம் ஹிட் கொடுக்கும் என சொல்லலாம். ஒருவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பின்னர்., அந்த வாய்ப்புகளை வைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டுமென என நினைப்பார்கள்.

ஆனால் நடிகர் “ஸ்ரீ”க்கு அப்படியில்லை., அவர் நடித்த 4 படங்களுமே நல்ல கதைக்களம் கொண்ட படம் என சொல்லலாம். இதனால் இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என சொல்லலாம். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த “மாநகரம்” படம் ஒரு ப்ளாக் பஸ்டர் படம். அதை தொடர்ந்து வெளியான இறுக்கப்பற்று படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஸ்ரீ வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.., அதாவது மிக மெலிந்த தோற்றத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் போல புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரின் இந்த நிலைக்கு போதைப்பழக்கங்கள் காரணம் என்றும், மறுபக்கம் பிரபல இயக்குனரே காரணம் என அவரது நண்பர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இதனை அறிந்த ஸ்ரீ ரசிகர்கள் அந்த இயக்குனரை திட்டி தீர்த்தனர்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்., ஸ்ரீ நிலை கண்டு மனம் வருந்துவதாகவும்., அவர் சீக்கிரம் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது., அதாவது நடிகர் ஸ்ரீ எழுதியுள்ள “MAY EYE COME IN” என்கிற புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை ஆன்லைன் இணையத்தளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பிரார்த்தனை வீண் போகவில்லை என சமூக வலைதங்களில் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஸ்ரீ-யின் உடல்நலம் பாதிப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News