நடிகர் விமலுடன் ஜோடி சேரும் அந்த பிரபல நடிகை..!!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் “விமல்” பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக இவர் அறிமுகமானாலும்., குருவி, புதுப்பேட்டை போன்ற படங்களில் இவர் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

களவாணி, வாகைச்சூடவா, கலகலப்பு-1, மன்னர்வகையறா, மற்றும் தேசிங்குராஜா என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதுவரையில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே குடும்ப கதை சார்ந்த படம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் கம்மிட்டாகியுள்ளார். கிராமப்புற பின்னணியில் தாயரிக்கவுள்ள இப்படம் காமெடி எண்டர்டெயினர் கலந்த படமாக இருக்குமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடியில் இன்று நடைபெற்றது. மேலும் இப்படத்தில் நடிகை முல்லை அரசி, சேத்தன், பருத்திவீரன்’ சரவணன் உட்பட பல முன்னணி நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளனர்.. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே இயக்குகின்றனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News