ஜனநாயகன் படத்தின் புதிய அப்டேட்..!! பூஜா ஹெட்சே கொடுத்த ஹிண்ட்..!!

தளபதி விஜய்-ன் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மற்றும் நரேன் என பல நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தளபதி விஜய்-ன் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடனம். எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்த சில முக்கிய அப்டேட்கள் கிடைத்துள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தாலும்., தற்போது அரசியலில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தவே ஜநாயகன் படத்திற்கு பின்பு இனி நடிக்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

எனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய்-ன் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. இதை அப்படத்தின் கதாநாயகி பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

RELATED ARTICLES

Recent News