தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் “தனுஷ்” காதல் கொண்டேன் படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்த இவர்.., முதல் படம் முதல் தற்போது வெளியான “ராயன்” வரை பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என அசுரன்., எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் இயக்கம் படங்களில் இவரே பாடல் எழுதி அதனை பாடியுள்ளார். இன்னும் ராக்காயி இட்லீ கடை., ஏ.பி.ஜே அப்துல்கலாம் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில்., ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், உருவாகியுள்ள படம் தான் “குபேரா”. இப்படம் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில்., இப்படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று தொடங்கிய நிலையில் தற்போது வரை 37 லட்சம் ரூபாய் வரை வசூல் ஆகியுள்ளது. படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.