ஆதி புருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டர், இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த போஸ்டரில், கலாம் என்ற படத்தின் டைட்டில் மட்டும், காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இந்த படத்தின் இயக்குநர், அப்துல் கலாமிற்கு காவி சாயம் பூச முயற்சி செய்கிறார் என்றும், அவர் அனைவருக்குமான தலைவர் என்றும், விமர்சித்து வருகின்றனர்.