இரண்டரை வயது குழந்தையை, தாயின் காதலன், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த 30 வயது பெண், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது இரண்டரை வயது மகளுடன், தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது, இந்த பெண்ணுக்கும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே, காதல் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்றும், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர், பெண்ணின் காதலன், வீட்டில் இருந்த இரண்டரை வயது குழந்தையையும், தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில்,
குழந்தை படுகாயம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால், குழந்தையை நிலையை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், குழந்தைக்கு அவர்கள் சிகிச்சையும் வழங்கி வந்துள்ளனர். இருப்பினும், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணையும், அவரது காதலனையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.