போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, ரஷ்யா உடன்படவில்லை என்றால், அதன் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் என்பது, கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு, அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்து வருகிறது.
இந்நிலையில், செனட் வெளியுறவுக் குழுவின் முன்னிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதன்படி, போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு, பல்வேறு விதமான நிபந்தனைகளை ரஷ்யா விதிக்கும் என தாங்கள் நம்புவதாகவும், அதற்கு பிறகு தான், அதிபர் புதின் எந்தமாதிரியான கணக்கு போடுகிறார் என்பது தெரியவரும் என்றும், மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஆனால், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்படவில்லை என்றால், அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்றும், அவர் எச்சரித்துள்ளார்.