பொற்கோவிலின் உள்ளே ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை – இந்திய ராணுவம்

ஆபரேஷன் சிந்தூரின்போது, விமானப்படை ஆயுதங்கள் எதுவும், பொற்கோவிலின் உள்ளே பயன்படுத்தப்படவில்லை என்று, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் துவக்கியது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி, அழித்தது.

இதன்காரணமாக, பாகிஸ்தானின் விமானப்படையினர், ட்ரோன்கள் மூலமாக, இந்தியாவை தாக்கியது. இந்த தாக்குதலை, சிறப்பான முறையில் இந்திய ராணுவம் தகர்த்தது. இதற்கிடையே, இந்த தாக்குதலை, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலின் உள்ளே இருந்துதான், இந்தியா தடுத்ததாக, தகவல் ஒன்று பரவி வந்தது.

இந்நிலையில், இந்த தகவலுக்கு, இந்திய ராணுவம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, பொற்கோவிலின் உள்ளே, விமானப்படை ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்படவில்லை என்று, பொற்கோவிலின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News