தனி ஒருவன் 2 எப்போது? இயக்குநர் தந்த அப்டேட்!

ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கியிருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு, படத்தின் பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

இந்நிலையில், இயக்குநர் மோகன் ராஜாவிடம், தனி ஒருவன் 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர், ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து, அனைத்தும் தயாராக இருப்பதாகவும், ரியான நேரம் வரும்போது படத்தை துவங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News