தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். 47 வயதாகும் இவர், திருமணம் செய்துக் கொள்ளாமலே இருந்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு, தனது நீண்ட நாள் காதலியை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அந்த திருமணமும், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இவ்வாறு இருக்க, நடிகர் விஷால் பிரபல நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக, தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை, நடிகர் விஷால் இன்று வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.