அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு, அவர் எந்த இயக்குநருடன் இணைவார் என்று, பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேசிங் தொடர்பான பணிகளில், மும்மரமாக உள்ள அஜித்குமார், தனது அடுத்த படம் குறித்து, புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதத்தில் தான், அடுத்த படத்தில் நடிப்பேன் என்றும், அந்த திரைப்படத்தை 2026-ஆம் ஆண்டுக்கான கோடை காலத்தில் வெளியிட முடிவு செய்துள்ளேன் என்றும், அவர் கூறியுள்ளார்.
ரேசிங் பணிகளில் இருப்பதால், தனது அடுத்த படத்திற்கு அதிக இடைவெளி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.