மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். வரும் ஜூன் 5-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நேற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சில காட்சிகள், இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படத்தில், நடிகை அபிராமிக்கு கமல் முத்தம் கொடுப்பது போன்ற காட்சியும், த்ரிஷாவுடன் கமல் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சியும், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.