ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு, நடிகர் மகேஷ் பாபுவின் 29-வது படத்தை, எஸ்.எஸ்.ராஜமெலி இயக்க உள்ளார். இந்த திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் நிலையில், படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் விக்ரம் நடிக்க உள்ளாராம். இந்த தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம், “நானும், ராஜமௌலியும், இணைந்து பணியாற்றுவது குறித்து பேசி வருகிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.