மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப்.
அதிரடி ஆக்ஷன் கதைக் களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் 5-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் 17-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், 24-ஆம் தேதி அன்று, பிரபல தனியார் கல்லூரியில், இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது.