மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் எனக் கூறி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், எம்.பி.கனிமொழியிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பர் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. ஆனால், இந்த ஆலையால், சுற்றுவட்டார பகுதிகளில், இயற்கை மாசடைவதாக கூறி, பொதுமக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தனர்.
இந்நிலையில், இந்த ஆலை மூடப்பட்டதால், வேலைவாய்ப்பை இழந்த பொதுமக்கள் சிலர், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறி, எம்.பி.கனிமொழியிடம் மனு அளித்துள்ளனர்.




