சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம், வரும் 16-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சந்தானம் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தற்போதைக்கு சினிமாவில் இருக்கவே விரும்புவதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு நல்லது செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும், கூறியுள்ளார்.