போர் நிறுத்தத்திற்கு சம்மதித்த இந்தியா – பாகிஸ்தான்! ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ இந்திய ராணுவம் துவங்கியிருந்தது. இந்த தாக்குதலுக்கு காரணமான, பல்வேறு தீவிரவாதிகளின் முகாம்களை, இந்திய ராணுவம் அழித்து வந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைப் பகுதியில், அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் அதிபர் டெனால்ட் டிரம்பு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமெரிக்காவின் பல்வேறு நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்வதாக, மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் தொடர்பான தகவலை, உறுதி செய்துள்ளார். 5 மணியில் இருந்து, தரை, வான், கடல் வழி தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News