எழில் இயக்கத்தில், விமல், பிந்து மாதவி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் தேசிங்கு ராஜா. கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது, இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 11-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.