கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ரெட்ரோ. காதல், ஆக்ஷன் ஆகிய இரண்டு அம்சங்களை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.
இருப்பினும், வசூலில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, இதுவரை உலகம் முழுவதும், 100 கோடி ரூபாய்க்கு மேல், இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படம், பல்வேறு விமர்சனங்களை தாண்டி, லாபம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.