பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில், சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு, புதுமன தம்பதிக்கு, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், நடிகர் ரவி மோகன், அவரது தோழியும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் உடன், அந்த திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார்.
இவர்களது வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில், தனது மனைவியை விட்டு பிரிந்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கூறி, கிசுகிசுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
