பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, ஆபரேஷன் சிந்தூர் -ஐ இந்திய ராணுவம் துவங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலேயே, அந்த சொல்லின் வர்த்தக முத்திரையை பதிவு செய்வதற்கு, ரிலையன்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள், விண்ணப்பித்திருந்தன.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய ராணுவத்தின் துணிச்சலின் அடையாளமாக உள்ள ஆபரேஷன் சிந்தூர் என்ற சொற்றொடரை பதிவு செய்வதற்கு, தங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், அனுபவம் இல்லாத ஊழியரின் தவறால், இந்த சொற்றொடரை வர்த்தக பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் இந்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.