சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை, நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு, சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆர்யா, புதிய லுக் ஒன்றில் வருகை தந்திருந்தார்.
இந்நிலையில், இவரது புதிய லுக் குறித்து, தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்திற்காக தான், அவர் இந்த லுக்கில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த வேட்டுவம் திரைப்படத்தில், நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.